RSS

மணிச்சுடர் இதழில் நாகூர் ஹனிபா ஆவணப்பட செய்தி


இசை முரசு நாகூர் ஹனிபா
ஆவணப்படம் தயாராகிறது
படங்கள்,தகவல்களை தர இயக்குனர் வேண்டுகோள்
75 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வெண்கல குரலால்
அனைத்து சமுக மக்களையும் ஈர்த்த மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் பற்றிய ஆவணப்படம் விறுவிருப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது.
இசை முரசு அவர்கள் இஸ்லாமிய பாடல்கள் கொண்டு அறியப்பட்டாலும் அவர்களின் பண்புகளால் சமயங்களைத்தாண்டி தலைவர்களுடன் அன்பு கொண்டவர்.இப்படிப்பட்ட மிக சிறந்த ஆளுமையை வளரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வரலாற்றின் கூர்மையான பகுதிகளை பதிவு செய்வது கடமை என்ற நோக்கில் இப்பணி நடைபெறுகிறது. .
அந்த அளப்பெரும் பணிகளை தன்முனைப்புடன் செய்து வரும் எடிட்டர் அலாவுதீன் அவர்கள் இந்த தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்,சிராஜுல் மில்லத்,பெரியார்,அண்ணா,கலைஞர் போன்ற தலைவர்களுடன் இசை முரசின் பயணங்கள் குறித்து பதிவு செய்து வருகிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களிடம் இசை முரசு குறித்து ஒளிப்பதிவு செய்யப்பட்டது.இதில் இசைமுரசு அவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள் குறித்தும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்,சிராஜுல் மில்லத் ஆகியோர்கள் இசைமுரசுவுடன் கொண்டிருந்த நெருக்கத்தை குறித்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.கடந்த வாரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் அவர்களிடமும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இசை முரசு குறித்து இன்னும் சில அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்தவர்களிடமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இதில் இசை முரசு இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளின் பயணங்கள் குறித்தும்,அவர் பாடிய இஸ்லாமிய பாடல்கள் பக்களிடம் ஏற்படுத்திய அதிர்வலைகள் குறித்தும் இடம் பெறுகிறது.
அதிக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாராகிவரும் இந்த ஆவணப்படம் இசை முரசு அவர்களின் நினைவலைகளை சமுதாய முன்னே கொண்டு வந்து நிறுத்தும்.
இசை முரசு குறித்த செய்திகள், போட்டோ,வீடியோ இருப்பவர்கள் இந்த ஆவணப்பட இயக்குனரை தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் எடிட்டர் அலாவுதீன்
செல்போன் :7418106301
செய்தி வெளியிட்ட மணிச்சுடர் ஆசிரியருக்கும்,நிர்வாகத்திற்கும் நன்றி