RSS

மீடியா காமெராக்கள் முஸ்லிம்களை நோக்கி திரும்புமா?



கத்தி திரைப்படம் விவசாயிகளின் துயரங்களை,தற்கொலைகளை உலகிற்கு வெளுச்சம் போட்டு காட்டி உள்ளது.கார்ப்பெரேட் கம்பெனிகளை தோலுரித்துள்ளது.மீடியாவின்
ஓர வஞ்சனைகளை கிழித்துள்ளது.

கத்தியில் ஒரு வசனம் விஜய் சொல்வார் 5000 கோடி கடன்வாங்கிய ஒரு பீர் கம்பெனி owner என்னால அந்த கடனை கட்டமுடியவில்லை என்று கை தூக்குறான்.ஆனா அவன் தற்கொலை பண்ணிக்கல அவனுக்கு லோனு கொண்டுத்த அதிகாரிகளும் தற்கொலை பண்ணிக்கல.ஆனா 5000 ருபாய் கடன் வாங்கின ஒரு விவசாயி அத கட்டமுடியாம வட்டி மேல வட்டி ஏரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்கிறான்.இத சொல்றதுக்கு டிவி,சேனல்ட கேட்டம் ஆனா டிவி-ல லேகியம் விற்கவும்,சமையல் செய்யவும்,டான்சுக்கு மார்க்கு போடவும் டைம் இருக்கு ஒரு கிராம அழியப்போதுன்னு சொல்ல 2 நிமிஷம் இல்ல.. 

இந்த வசனம் பார்க்கும் போதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது
தமிழக சிறைகளில் சுமார் 50 முஸ்லிம் சிறைவாசிகள் 16 ஆண்டுகள் முதல் 19 ஆண்டுகள் வரை சிறையில் இருந்து வருகிறார்கள் இவர்களை பற்றி,இந்தியாவின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி,தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி,ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைகளை பற்றி,"சாரே ஜஹான் சே அச்சா" பாடல் எழுதிய கவிஞர் இக்பால் பற்றி 

இதுவரை எந்த டிவி-சேனலும் வாய் திறக்கவில்லை என்று.
விவசாயி தற்கொலை,அவர்களின் கஷ்டங்கள்,அவர்களுக்கு கார்ப்பெரேட் கம்பெனிகளின் நெருக்கடிகளை கத்தி மூலம் பார்க்க நேர்ந்தது.இன்று மக்களுக்கு விவசாயிகளின் வாழ்கை துயரங்கள் சென்றிருக்கும் கத்தி திரைப்படம் மூலம்.இதற்கு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

இதை போன்று முஸ்லிம் சிறைவாசிகள் குறித்து திரைப்படம் எடுக்க இயக்குனர்கள் முன்வரவேண்டும்.தமிழ் நடிகர்களை மலேசியா,சிங்கப்பூர்,துபாய் அழைத்துக்கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தும் முஸ்லிம்கள் நமது வரலாற்றை,சுவடுகளை,ஆவணங்களை படம் எடுக்க முன்வரவேண்டும்.
மொத்தத்தில் மீடியா காமெராக்கள் முஸ்லிம்களை நோக்கி திரும்புமா?என்பதே நமது எண்ணம்.
-Editor Alaudeen