RSS

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் மாற்றம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் மாற்றம்

ஜெயலலிதா கைதை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும்
தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அதிமுகவை கடுமையாக விமர்சித்துவருகிறார்.

சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தன்னை கைது செய்தவுடன் தீவிரமாக இயங்கியிருக்க வேண்டிய ஆரிய கூட்டம் தன் கைதை ஆதரித்ததுடன் எதிராகவும் வேலை செய்ததை

அம்மையார் புரிந்துகொண்டதால் ....
தன் கட்சியில் பெரும்பான்மை கொண்ட ஒரு சமூகம் கூட தன் பலத்தை முழுவதுமாக பயண்படுத்தி தன் விடுதலைக்காக போராடவில்லை என்ற பெரும் கோபம் அம்மையாருக்கு ஏற்பட்டு இருப்பதால் ..
தனக்காக உண்மையாக போராடுபவர்கள்,நடிப்பவர்கள் யார்?என்ற பட்டியிலெள்ளாம் அம்மையாரின் கைகளில் சென்றுவிட்டதாம்..

சென்ற பட்டியிலில் அம்மையாரின் விடுதலைக்காக எந்த சன்மானத்தையும் எதிர்பார்க்காமல் போராடியது சிறுபான்மை மற்றும் ஒடுக்கபட்ட மக்கள்தான் என்பதை வெகுவாக புரிந்துகொண்ட அம்மையார் ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததும் தமிழக அரசியலில் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி இந்துத்வ கட்டமைப்புக்களுக்கு அதிர்ச்சியை கொடுக்க இருக்கிறாராம்

அம்மையாருக்கு இப்போது தெரிந்திருக்கும் நீங்கள் யாரை (ஆரிய கூட்டத்தை) நம்பினீர்களோ அவர்கள் உங்கள் கைதையும் ஆதரிக்கிறார்கள்,ஜாமீனில் லாபியும் செய்கிறார்கள்.

இப்பொழுதாவது புரிந்திருப்பீர்கள் உங்களோடு யார் இருக்கிறார்கள் என்று.
 Editor Alaudeen