RSS

நாகூர் ஹனிபா பாடல்கள் காலத்திற்கும் அழியாதவைகள்.

ஒரு காலம் இவரின் குரல் ஒலிக்காத திருமணங்கள் நடக்காது...பெருநாட்களில் ஒவ்வொரு தெருக்களிலும் இவரின் குரல். எங்கோ ஒலிக்கும் இவரின் குரல் காற்றில் பட்டு நமது காதுக்கு ஒலிக்கும்போதுதான்
யாருக்கோ கல்யாணம் போல என்று சொல்வோம்.திமுக மாநாடுகளில் இவரின் குரலில் தான் மாநாடு துவங்கும்.இன்னும் சொல்லப்போனால் காலையில் வானொலியில் இவரின் பாடல்தான் முதலில் ஒலிக்கும்.திருமணம்,இஸ்லாமிய நிகழ்ச்சிகள்,பெருநாட்கள்,திமுக மாநாடுகள் என்று கேட்ட இந்த குரல் இப்போதும் கேட்கும்போது இனிமையாகவே உள்ளது.மதுரை மூத்த ஆதீனகர்த்தா அருணகிரி நாதர் தன் ஓய்வு நேரங்களில் விரும்பிக்கேட்கும் பாடல் இதுதானாம் https://www.youtube.com/watch?v=GgqusGrvPlM
இவர் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் ஒலிக்காத இடங்கள் இருக்காது.டி கடை முதல் குன்றக்குடி அடிகளார், சோமசுந்தர தம்பிரான் போன்றவர்களின் மடம் வரை இந்தப் பாடல் ஒலிக்கிறது.

அதுமட்டும் அல்ல இவர் பாடிய “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!” என்ற பாடலை நடிகர் வடிவில் ஒரு நிகழ்ச்சியில் பாடி பார்த்தவர்களை உணர்ச்சியில் ஆழ்த்தினார்.
www.youtube.com/watch?v=k7eb5MJGSl8
மரணத்தை குறித்து இவர் பாடிய மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா? என்ற பாடலை கேரளாவில் மலையாள சிறுவன் பாடி இருப்பதும் www.youtube.com/watch?v=_FMAXFY0QWk
இப்படி இவர் பாடலை உள்நாட்டினர் முதல் வெளிநாட்டவர் வரை ரசித்துள்ளர்கள்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் நாகூர் ஹனிபா அவர்களை பாடசொல்லி ரசிப்பார்கள்.
இவர் பாடிய அருள் மழை பொழிவாய் ரஹ்மானே! காண கண் கோடி வேண்டும் கஃபாவை,தாயிப் நகரத்து வீதியிலே,ஒரு நாள் மதீனா நகர்தனிலே,ரமலான் புனித ரமலான், ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்,நீராடும் கண்களோடு,பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை ஆகிய பாடல்கள் பிரபல்யமானைவைகள்.
இவரின் பாடல்கள் காலத்திற்கும் அழியாதவைகள்.
-Editor Alaudeen