RSS

தந்தை பெரியார் பார்வையில் இஸ்லாம்



நீ சூத்திரன், வேசிமகன், உனக்கு சரிசமத்துவம் இல்லை என்பது இல்லை இஸ்லாத்தில்.

பணிவையும்,சாந்தியையும்,உண்மை சகோதரத்துவத்தையும், கொள்கையாக கொண்ட
மார்க்கம் இஸ்லாம்.ஒற்றுமை கட்டுப்பாடு கொண்ட மார்க்கம் இஸ்லாம்.இதை யாரும் மறுக்கமுடியாது.இது உண்மை!உண்மை!

ஆரிய மதத்திற்கு பல கடவுள்கள் உண்டு ஜாதி பேதங்களுண்டு
மக்கள் பிராமணன்,சூத்திரன்,பஞ்சமன் என்ற உயர்வு தாழ்வு கொண்ட சாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு கடவுள் தான் உண்டு.ஜாதி பேதங்கள்;உயர்வு தாழ்வு கிடையாது பிறவியின் காரணமாய் ஜாதி பாகுபாடும்,மேன்மை இழிவும் கிடையாது.

திராவிடர்களுக்கு இஸ்லாத்தினால் நலம் ஏற்பட இழிவு நீங்க வசதியாகிறது.
இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து.

“அடுத்து எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்துடன் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. இது செல்வாக்குக்குட்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி ஐயப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு போய்ச் சேருவது என்பதைத் திருத்தி போட வேண்டும் என்று சொல்லி ஏக மனதாக நிறைவேற்ற செய்தார். இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஐம்பது பேர்கள் முஸ்லிம்களாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள், இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.”(விடுதலை 9.1.1959)

“எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதை கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள் அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், நீங்கள் ஒண்டியாகப் போகக்கூடாது. குறைந்தது ஒரு லட்சம் பேரோடு மதம் மாற வேண்டும்.ஒரு லட்சம் பேரோடு தாங்கள் அங்கு போகும் போது நானும் ஒரு பத்து இருபதாயிரும் பேர்கள் தருகிறேன் என்பதாகத் தந்தி கொடுத்தேன்.” (ஆனைமுத்து தொகுப்பு, பக். 1033)
-Editor Alaudeen