RSS

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?
பின் ஏன் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறினார்கள். இதை பற்றி என்றாவது சிந்தித்தோமா?
உலக மக்கள் தொகைகளை ஆய்வு செய்யும் ஆய்வுகள் அனைத்தும் 2030 களில் சில நாடுகள் இஸ்லாமிய நாடாக மாறும் என்று சொல்கிறார்களே அப்படி என்ன ஈர்ப்பு உள்ளது அந்த மார்க்கத்தில்.
"ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி,
இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்".
"1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது"
கனடா இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து இன்றும் அதிவேகமாக பரவி வருகிறது.
"ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்".ஜெர்மனியில் அதிவேகத்தில் பரவி வருகிறது.
நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன.(முஸ்லிம்களாக மாறிவருபவர்கள் சேர்த்து) மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.
பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன.இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படி அசூர வேகத்தில் பரவும் மார்க்கத்தை பற்றி என்றாவது படித்தோமா?குரானை என்றாவது வாசித்தோமா?முஹம்மது நபி அவர்கள் பற்றிய வரலாற்றை படித்தோமா?
‘எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்’(அல்-குர்ஆன் 47:34)
குரானை பொருள் உணர்ந்து படியுங்கள்.

5 June