RSS

நாகூர் ஹனிபாவுடன் ஒரு பயணம்

Nagoor Hanifa With Editor Alaudeen

இன்று இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.பார்த்தவுடன் நலம் விசாரித்தார். உற்று நோக்கி பார்த்துகொண்டிருந்தார் என்னை..பின்னர் அவரின் மகன் நவுஷாத் அவர்கள் அறிமுகம் செய்ததும் எனது கைகளை பிடித்து கொண்டார்.அகவை 90 ஆனாலும் கம்பிர தோற்றம் அல்ஹம்துலில்லாஹ்.
1940 களில் தொடங்கி 2006 வரை
சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாக பாடி உள்ளார் ஹனீபா.இவரின் குரல் ஒலிக்காத இடங்கள் இல்லாத அளவில் தனித்த குரல்.இன்றும் எத்தனையோ இஸ்லாமிய பாடகர்கள் இருந்தாலும் இவரின் குரலுக்கும்,தமிழ் உச்சரிப்புக்கும் போட்டிக்கு ஆட்கள் இல்லை.அவரது குரல் கேட்க ஆரம்பித்துவிடும் போது சட்டென ஒரு புத்துணர்ச்சி இதயமெங்கும் பரவ ஆரம்பித்துவிடுகிறது.நம்மை அறியாமலே நாமும் பாட ஆரம்பித்துவிடுவோம்.
Editor Alaudeen
பெரியாரோடு இருந்தார்,அண்ணாவோடு பழகினார்,கண்ணியமிகு காயிதே மில்லத்தோடு சகோதரத்துவம் கொண்டார்,கலைஞருடன் நண்பராய் இருந்தார் அதுபோன்று இன்றும் காணவருபவருடன் கண்ணியத்துடன் நடந்துகொள்கிறார். பார்த்ததுடன் ஸலாம் சொல்லிவிட்டு நமது இரு கைகளையும் பிடித்து நலம் விசாரிக்கிறார். அல்ஹம்துலில்லாஹ் இன்றும் நல்ல நினைவாற்றல்.
-Editor Alaudeen